செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் முத்துவேலுவை நீக்க தமிழர் எழுச்சி இயக்கம் கோரிக்கை
சென்னை: சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராக இருக்கும் மு.முத்துவேலு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து இருந்துவரும் நிலையில் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய் தமிழர் எழுச்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பு முதல்வர் ஜெயலலிதா, உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது முத்துவேலுவை உடனடியாக நீக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவெடுத்துள்ளது.
சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் பணியாளர் மீது சாதிய பாலிய வன்கொடுமை செய்ததோடு நின்றிடாமல்... 2013ஆம் ஆண்டு முதல் அயல்பணி கால நீட்டிப்பிற்கான அரசு ஆணையும்.. இந்நிறுவன தலைவரான தமிழக முதல்வரின் ஒப்புதல் ஆணையும் பெறாமல்.. செம்மொழி நிறுவனப் பதிவாளராக பணியமர்த்தம் செய்யப்பட்ட மு.முத்துவேலுவை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துப் பணி நீக்கம் செய்யவும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குநரை தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் ப. வேலுமணி 13-8-2014 அன்று மாலை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
அப்போது அவருடன், சென்னை மாவட்டச் செயலர் வெ.குமரவேல், காஞ்சி மாவட்ட செயலர் ப. கண்ணன் மற்றும் வின்னரசு, பின்னி, சரவணன் ஆகிய அமைப்புத் தோழர்களும் சென்றிருந்தனர். மேலும் தமிழின உணர்வாளர்களும் கோரிக்கை மனு அனுப்பி செம்மொழி நிறுவனத்தை காப்பாற்ற வேண்டுகோளும் வைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications