ரூபாய் நோட்டு செல்லாது.. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நவ. 28ல் இடதுசாரிகள் போராட்டம்
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.
சென்னை: மோடி அரசு கொண்டு வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து வரும் 28ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் இந்தியா முழுவதும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கி வாசல் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்ததில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். சிறு, குறு நிறுவனங்கள், தொழில்கள், பெரும் வர்த்தகங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவக் காரணமாக இருந்த மத்திய அரசையும் பாஜகவையும் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், வரும் 28ம் தேதி அன்று கண்டன நாள் அனுசரிப்பு தினமாக எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications