கட்டுக்கட்டாகப் பழைய ரூபாய் நோட்டுகள்... பதுக்கி வைத்திருந்தவர் கைது!
காரைக்குடியில் ராமசாமி என்பவர் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, அவரிடமிருந்து 51 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்குடி: கட்டுக்கட்டாக பழைய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து அந்த பணத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தன் வீட்டில் மதுரையில் இருந்து கொண்டு வந்த பழைய ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, போலீசார் அவர் வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்ட போது, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் பழைய நோட்டுகளாக 51 லட்சம் ரூபாய் கிடைத்தது.
உடனே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
மேலும், பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களை கைது செய்வோம் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications