போச்சு.. டிமான்டி காலனி பேய் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன...!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருந்த டிமாண்டி காலனியில் பயன்பாடற்று இருந்த வீடுகள் நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த வீடுகளுக்கு பெரும் பேய் பின்ணனி உண்டு. டிமாண்டி காலனியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக கிளம்பிய வதந்தியால் அப்பகுதி ஆள் நடமாட்டமில்லாத பகுதியாக பலகாலமாக திகழ்ந்து வருகிறது.
இங்குள்ள வீடுகளில் பேய்கள் குடியிருப்பதாகவும் கூட வதந்திகள் உள்ளன. இதை வைத்து சமீபத்தில் கூட படம் எல்லாம் கூட வந்தது.

வதந்தி பேய்:
இந்நிலையில் டிமாண்டி காலனியில் முன்பு வசித்த மக்கள், டிமாண்டி காலனி சொத்தை கையாள்வதில் சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பிவிடுவதாக கூறி வந்தனர்.

தவிடு பொடியாக்கிய மாநகராட்சி:
இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று காலை டிமாண்டி காலனியில் அமைந்திருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

ஜான்சி ராணி:
இது குறித்து 123 ஆவது வார்டு ஜான்சி ராணி கூறும்போது, "இங்குள்ள கட்டிடங்கள் இப்போதைக்கு இடிக்கப்படுகின்றன. ஆனால், இங்கு வேறு கட்டிடம் கட்ட அனுமதியோ, இல்லை காலனியை மீண்டும் உருவாக்க அனுமதியோ யாரும் கோரவில்லை" என்றார்.

மீண்டும் வருமா டிமான்டி?:
இதற்கிடையில் டிமாண்டி காலனி சொத்தை நிர்வகித்துவரும் சென்னை, மயிலாப்பூர் ஆர்ச்டயசிஸ் நிர்வாகிகளோ, டிமாண்டி காலனியை மீண்டும் உருவாக்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆதரவற்றோரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது இக்காலனி என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications