அச்சத்தில் அலோபதி... சித்தமருத்துவம் பற்றி அவதூறு!
டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு என்று சித்த வைத்தியத்தை நோக்கி மக்கள் நகர்வதால் அலோபதி மருத்துவர்கள் அவதூறு பரப்பவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் பரிந்துரை செய்யப்படுவதால் அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவம் குறித்து அவதூறு பரபப்புவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சல் குணமாக நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு பரிந்துரை செய்யப்படுகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் டெங்குவிற்கு நிலவேம்புக் கஷாயம் அருந்தும்படி மக்களை அறிவுறுத்தி வருகிறார்.
இதனால் மக்கள் மீண்டும் சித்த மருத்துவத்தை நாடத் தொடங்கியுள்ளனர். பண்டை காலத்தில் நோய்களுக்கு சிகிச்சையாக இலை, தழைகளின் சாறுகளை எடுத்து மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த பாரம்பரிய சித்த மருத்துவத்தில் இருந்து மக்கள் உடனடி நிவாரணம் தரும் ஹலோபதி மருத்துகளை நாடிச் செல்ல ஆரம்பித்தனர்.

சித்த மருத்துவம் டூ அலோபதி
சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலத்திற்குப் பிறகே நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும், ஆனால் அது நிரந்தர நிவாரணமாக இருக்கும். மேலும் சித்த மருத்துவத்தில் கொடுக்கப்படும் கஷாயம், சூரணம் உள்ளிட்டவை உட்கொள்ள கடினமாகக் கருதப்பட்டது. இந்நிலையில் எளிதாக உட்கொள்ள வசதி, நவீன கருவிகள் சிகிச்சை என்று அலோபதி அபிரிமித வளர்ச்சியடைந்தது.

பழமை சிகிச்சை முறை
எனினும் டெங்கு காய்ச்சலை எந்த மருந்தும் கட்டுப்படுத்தாத நிலையில் நிலவேம்பு கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என்பதால் அதனை அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் சித்தமருத்துவத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், நிலவேம்புக் கஷாயத்தை எல்லோரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பிரச்சாரம் பரப்பப்படுகிறது. மேலும் நிலவேம்புக் கஷாயத்தை உட்கொண்டால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்றும் ஒரு ஆய்வு வெளியானது.

ஆய்வில் தகவல்
ஆனால் இவையெல்லாம் நம்பகமில்லா தகவல்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. நிலவேம்புக் கஷாயம் டெங்குவை கட்டுப்படுத்தும் என்று கிங்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

சித்த மருத்துவர்கள் விளக்கம்
சித்த மருத்துவத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வதந்தி பரப்பப்படுவதாகவம், இதனை நம்ப வேண்டாம் என்றும் சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெறும் நிலவேம்புச் சாறை மட்டும் அருந்தாமல் அத்துடன் சேர்த்து ஆடாதொடை, சுக்கு உள்ளிட்டவற்றை சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் டெங்கு கட்டுப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பது அவர்களின் கூற்று.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications