டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் மரணம்.. தமிழக அரசு தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகை: டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் பல உயிரிழப்புகளும் நடைபெற்றுள்ளன. பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

Dengue fever: 52 were died in Tamilnadu, says Health care department secretary

இதற்காக தமிழக அரசு சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் இருந்த இடங்கள் கண்டறியப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் இதுவரை 52 பேர் உயிரிழந்துவிட்டனர்.

டெங்கு பாதிக்கப்பட்ட 80 பேருக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். மேலும் இந்த தகவல்கள் தமிழக அரசின் கணக்கின்படி தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+