புதுவை அதிமுக எம்.எல்.வுக்கு டெங்கு... தீவிர சிகிச்சை : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவையில் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கபப்ட்டு வருவதாகவும் காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Dengue fever is spreading in Puducherry

புதுவையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண நலம் அடைந்துவிடுவார் என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் கூறிய ராமன், தமிழகத்திலிருந்து பரவிய டெங்குக் காய்ச்சல் புதுச்சேரியிலும் சிலரை பாதித்துள்ளது. இதுவரை டெங்குக் காய்ச்சலால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

இந்நிலையில், டெங்கு பரவுவதைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. அதற்கு 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Puducherry Dengue fever is spreading fast said Raman, director of health department. And Admk Mla Vaiyapuri Manikandan also affected by Dengue and he is getting recovered.
Please Wait while comments are loading...