மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி.. முதல்வர் விஜய் அதிரடி
சென்னை: தமிழக முதல்வர் விஜய் கல்வி அலுவலங்கள், கோயில்கள் அருகே இருக்கும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிட்டு இருந்தார். இதில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகளில் பணியிடங்களை நிரப்புவதுடன், டாஸ்மாக் குடோன்கள் மற்றும் அலுவலகப் பணிகளிலும் ஊழியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார். பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து, அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. வழிபாட்டு தலங்களுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கடைகள் மூடப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் அதில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராடவும் செய்தனர். இந்த நிலையில்தான், மூடப்படும் கடைகளில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவில் கூறியிருப்பதாவது:- மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த கடைப்பணியாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பட்டியல் தயார் செய்து, மூடப்பட்ட கடைகளுக்கு அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை கூடுதல் ஏற்படும் மதுபான கடைகளில் மூடப்பட்ட கடைப்பணியாளர்களை பணிமூப்பின் அடிப்படையில் பணிநிரவல் செய்யப்படவேண்டும்.
மூடப்பட்ட கடைப்பணியாளர்களில் எஞ்சிய பணியாளர்களை காலி பணியிடம் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிநிரவல் செய்திடவும், மீதமுள்ள பணியாளர்கள் கையிருப்பில் இருந்தால் அப்பணியாளர்களை கிடங்கு பணிகளிலும் மாவட்ட அலுவலக பணிகளிலும் இப்பணியாளர்களை பணிநிரவல் செய்திட அனைத்து மாவட்ட மேலாளர்களை அறிவுறுத்தப்படுகிறார்கள்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications