டெங்கு பற்றி பேசிய கலெக்டர்... பேப்பரில் கோலம் போட்ட பெண் அதிகாரி
டெங்குவை ஒழிக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது பெண் அதிகாரி ஒருவர் அலட்சியமாக பேப்பரில் கோலம் போட்ட படம் தற்போது வைரலாக பரவியுள்ளது.
Recommended Video

சிவகங்கை: டெங்குவை ஒழிக்க ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொழுதை கழிக்க பெண் அதிகாரி ஒருவர் கோலம் போட்ட படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் தினந்தோறும் குறைந்தது 6 பேருக்கு மேல் இறந்த வண்ணம் உள்ளனர். வடகிழக்கு பருவமழை வேறு தொடங்கவுள்ள நிலையில் இந்த காய்ச்சலால் தமிழகமே பீதிஅடைந்துள்ளது.

டெங்கு தடுப்பு முறைகள்
தமிழக அரசும் அரசு அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆய்வு நடத்தி டெங்குவை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

டெங்கு தடுப்பு கூட்டம்
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

கவனம் செலுத்தாத...
இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் அதிகாரி ஒருவர், டெங்கு தடுப்பு குறித்த ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல், குறிப்பெடுப்பதற்காக வழங்கப்பட்ட காகிதத்தில் கோலமிட்டு பயிற்சி மேற்கொண்டார்.

குறிப்பெடுத்த அதிகாரி
அருகில் இருந்த மற்றோரு பெண் அதிகாரி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் அவர் கோலமிடுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் மாண்டு வரும் நிலையில் அதற்கான கூட்டத்தை அலட்சியப்படுத்துவது சரியா என்றும் அந்த பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications