தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியோடு மழை பெய்யுமாம்… சொல்கிறார் ரமணன்
சென்னை: இலங்கை அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் தென்மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை, கன்னியாகுமரி கடல் பகுதியில் கடந்த சிலநாட்களாகவே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவானது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. தற்போது இந்த சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் தென் பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்க கடலில் வரும் 26ம்தேதி புதிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உதயமாகியுள்ளது.
அது வரும் 27ம் தேதி வடக்கு நோக்கி நகரும் போது கடல் கொந்தளிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால், மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை தொடரும். சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். நாளை முதல் 3 நாட்கள் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ரமணன் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications