நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் பூப்புனித விழாவில் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் கொண்டாட்டம்!
சென்னையில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
சென்னை: நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேரில் சந்தித்து ஆறுதல்
அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சியினரும் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

சமாளிப்பு
ஆனால் தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட இதுவரை எட்டிப்பார்க்கவில்லை. மாறாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து வரும் அவர்கள், தவிர்க்க முடியாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக சமாளித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் அமைச்சர்கள் கொண்டாட்டம்
இந்நிலையில் சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித விழாவில் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ராஜேந்தி பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், மாஃபா பாண்டியராஜன், எம் ஆர் விஜயபாஸ்கர், சபாநாயகர் தனபால், எம்பி மைத்ரேயன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

மக்கள் கோபம்
தமிழகமே கொந்தளிக்கும் நிலையில் துணை முதல்வரும் அமைச்சர்களும் பூப்புனித விழாவில் பங்கேற்றிருப்பது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications