நில பத்திரப்பதிவுக்கு ரூ11,500 லஞ்சம்: ஊழல் ஒழிப்பு நாளில் கடலூர் துணை கலெக்டர் கைது
கடலூர்: நிலப் பத்திரப் பதிவுக்கு ரூ11,500 லஞ்சம் வாங்கியதாக கடலூர் மாவட்ட தனி துணை கலெக்டர் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரியகாட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜா. இவர் அதே பகுதியில் 35 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை பத்திரபதிவு செய்வதற்காக குறிஞ்சிப்பாடி அலுவலகத்துக்கு சென்ற போது முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த கடலூருக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியரகத்திலுள்ள முத்திரைத்தாள் அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர் தாஸை சந்தித்துள்ளார். அப்போது நிலத்தின் மதிப்பை குறைத்து ரூ.8,500க்கு பதிவு செய்வதாகவும், அதற்கு ரூ.11,500 சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தாஸ் கேட்டுள்ளார்.
இது குறித்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி தாஸிடம் அவரது ஓட்டுநர் பிரபாகரன் லஞ்சப் பணத்தை வழங்கினார். அப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் ஒழிப்புத் தின உறுதிமொழியேற்கப்பட்ட சிறிது நேரத்திலேயே துணை கலெக்டர் தாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications