எங்கிருந்து செல்கிறது.. எப்போது செல்கிறது.. பொங்கல் சிறப்பு பேருந்துகளின் பட்டியல்!
பொங்கல் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்லும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து செல்லும் என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் மாணவர்கள் இப்போதே தங்களது சொந்த வீட்டிற்கு சென்று கொண்டு உள்ளனர்.

இதனால் தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதை தடுப்பதற்காக காலையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நிறைவடைந்து இருப்பதால் பேருந்துகள் ஓடத்தொடங்கி உள்ளது.
சென்னையில் 5 இடங்களில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அண்ணாநகர் மேற்கில் ஆந்திரா நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். சைதாப்பேட்டையில் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.
பூந்தமல்லி நிலையத்தில் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, ஆற்காடு, ஓசூர் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.தாம்பரம் சானிடோரியம் நிலையத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.
கோயம்பேடு நிலையத்தில் மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும். இதனால் சென்னையின் உட்பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
காலதாமதம் காரணமாக சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இன்றி நேரடியாக மக்கள் பயணம் செய்யலாம் எனப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications