தமிழகம் முழுவதும் 11 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டி.ஜி.பி., ரஜேந்திரன் உத்தரவு
காவல்துறையில் பணிபுரிந்து வந்த 11 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த காவல்துறை உதவி ஆணையாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த அழகேசன் சென்னை மாநகர உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அம்பத்தூர் உதவி ஆணையாளராக இருந்த ஏ.பி.செல்வம் தி.நகர் பகுதிக்கும், தி.நகர் உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அம்பத்தூர் பகுதிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய குற்றவியல் பிரிவின் உதவி ஆணையாளர் வின்சென்ட் ஜெயராஜ், அசோக் நகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோட்டூர்புரம் உதவி ஆணையாளர் ஆல்பிரெட் வில்சன், பூந்தமல்லி பகுதிக்கும், பூந்தமல்லி உதவி ஆணையாளர் முத்தழகு, எழும்பூர் பகுதிக்கும் பணி இட மற்றம் செய்யப்பட்டுள்ளனர். எழும்பூர் உதவி ஆணையாளர் sc /st விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மத்திய குற்றவியல் பிரிவின் இணை ஆணையாளர் ரவிச்சந்திரன், ராஜபாளையம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அசோக் நகர் உதவி ஆய்வாளர் ஹரிகுமார் வனிகவரித்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை புலனாய்வு பிரிவில் பணி புரிந்து வந்த ராஜகாளியப்பன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவிற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications