For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்லூரியை பயன்படுத்திக்கோங்க.. 100 படுக்கை.. ரூ. 11 லட்சம் நிதி.. நெகிழ வைத்த மயிலாடுதுறை ஆதீனம்!

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு அது கொரோனா சிகிச்சைக்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. நிதியாக பல கோடிகளை பொதுமக்களும், நடிகர்களும், தொழில் அதிபர்களும், அரசியல் தலைவர்களும் ஒதுக்கி வருகிறார்கள்.

 மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள் மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

அதேபோல் இன்னொரு பக்கம் பொருளாக ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் தொடங்கி பலர் தங்களின் கல்யாண மண்டபம், தொழிற்சாலைகளை அரசுக்கு உதவியாக இருக்கட்டும் என்று வழங்கி வருகிறார்கள்.

உதவி

உதவி

இந்த நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சிகிச்சை மையம் நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. 100 படுக்கைகளுடன், தனித்தனி கழிப்பறை வசதிகளுடன் இந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

உதவி

உதவி

இந்த நிலையில் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தற்காலிக சிகிச்சை மையம் நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. 100 படுக்கைகளுடன், தனித்தனி கழிப்பறை வசதிகளுடன் இந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள்

மயிலாடுதுறையில் கொரோனா கேஸ்கள் உயர்ந்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள். அதேபோல் மயிலாடுதுறையில் பெரிய அளவில் தனிமைப்படுத்தும் வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் திடீரென அதிக நோயாளிகள் வந்தால் உதவியாக இருக்கும் என்று கூறி இப்போதே தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் இந்த தற்காலிக சிகிச்சை மையத்தை உருவாக்கி, அதை அரசிடம் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளது.

சிறப்பு

சிறப்பு

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்த சிகிச்சை மையத்தை நேராக நேற்று அரசு மருத்துவனையிடம் ஒப்படைத்தார். அதோடு இங்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக ஆதீனம் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் ஏற்கனவே 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளது.

கூடுதல்

கூடுதல்

தற்போது கூடுதலாக இந்த சிகிச்சை மையமும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதோடு 11 லட்சம் ரூபாய் ஆதீனம் மூலமாக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் இந்த உதவி மக்களிடையே பெரிய அளவில் வரவேற்புகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

English summary
Dharmapuram Adheenam creates 100 bed Covid 19 treatment center and gives 11 lakh rupees to the Tamilnadu CM fund for Corona relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X