அலங்கோலத்துடன்.. ஒதுக்குப்புறத்தில் கிடந்த ஜோடி.. ஒரு காலில் மட்டும் செருப்பு.. தடுமாறும் தர்மபுரி
தர்மபுரி: தர்மபுரியே கதிகலங்கி போயிருக்கிறது.. ஒதுக்குப்புறத்தில் விழுந்து கிடந்த இந்த ஜோடி யார் என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். இதனால் அதியமான்கோட்டையில் பரபரப்பு நிலவுகிறது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தடங்கம் அருகே உள்ளது வெத்தலகாரன்பள்ளம் செங்காளம்மன் கோயில்.. இந்த கோயில் பக்கத்திலேயே, சிப்காட் தொழிற்பேட்டை புதிதாக அமைய உள்ளது..

இங்குள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கிட்டத்தட்ட 600 மீட்டர் தொலைவில், 2 நபர்களின் சடலங்கள் கிடப்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.. இதனால், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்..
சடலம்: 55 வயது மதிக்கத்தக்க ஆண், 50 வயது மதிக்கத்தக்க பெண் இருவரின் சடலமும் அங்கே விழுந்து கிடந்தது.. இரண்டு சடலமும் அழுகியும் காணப்பட்டது.. இரண்டு சடலங்களிலும் உடம்பெல்லாம் கத்திக்குத்துகள் ஏராளமாக கிடந்தன.. எனவே, 2 சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணையையும் துவங்கியிருக்கிறார்கள்.. தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், நேரிலேயே சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்.. மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க விடப்பட்டுள்ளது.. தடயவியல் நிபுணர்களும் ஸ்பாட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.
விசாரணை: இவர்கள் 2 பேருமே எந்த ஊரை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. எதற்காக யார் கொன்றார்கள் என்றும் தெரியவில்லை.. எப்படியும் இருவரும் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது..
கொலை செய்யப்பட்ட ஆண், சிவப்பு கலர் பேண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்... அவரது மார்பு, வயிறு பகுதிகளில் மொத்தம் 5 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.. முதுகிலும் கத்திக்குத்து விழுந்திருக்கிறது.. இதற்கான காயங்கள் ஆழமாக காணப்படுகின்றன.. அவரது கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்ட அடையாளமும் தென்பட்டுள்ளது..
அடையாளம் இல்லை: ஆனால், முகம் மட்டும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது... அவரது இடது காலில் ஒரு செருப்பும், மற்றொரு செருப்பு சடலத்தின் அருகேயும் கிடந்தது.
அதே போல், கொலை செய்யப்பட்ட பெண், பச்சை நிறத்தில் சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.. அவரது மார்பில் கத்திக்குத்து இருந்தது... அவரது கழுத்து சேலையால் நெரிக்கப்பட்டிருந்தது. அவரது ஆடைகள் அலங்கோலமாக கலைந்திருந்தன.. எனவே, கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒதுக்குப்புறம்: இவர்கள் 2 பேரையுமே வேறு எங்கேயோ கொன்றுவிட்டு, சடலங்களை மட்டும் காரில் கொண்டுவந்து, இந்த ஒதுக்குப்புறத்தில் வீசிவிட்டு சென்றிருக்கிறார்கள்.. இந்த பகுதி முழுவதுமே ஆள்நடமாட்டம் இல்லாத இடமாகும். இதை தெரிந்துதான், இந்த பகுதியில் சடலத்தை வீசிவிட்டு போயிருப்பதாக தெரிகிறது. ஆனால், அந்த மர்மநபர்களும் யார் என்று தெரியவில்லை. அதேபோல, கொலையானவர்களும் தம்பதியா? கள்ளக்காதல் ஜோடியா? என்றும் தெரியவில்லை..
எனவே, அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.. செல்போன் சிக்னல்களை வைத்தும் விசாரணை நடக்கிறது..
பரபரப்பு: இது இரட்டை கொலை தொடர்பான எந்த க்ளூவும் இதுவரை கிடைக்காத நிலையில், மோப்பநாய், கைரேகைகள், கேமரா, செல்போன் சிக்னல் போன்றவற்றின் உதவியுடன் போலீசார் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில், 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.. இப்போது, இவ்வளவு கொடூரமாக 2 பேர் கொல்லப்பட்டிருப்பது, அம்மாவட்ட மக்களை மேலும் கதிகலங்க வைத்துவருகிறது.












Click it and Unblock the Notifications