68 பெண்களின் வாழ்க்கையை சீரழித்த தர்மபுரி சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை
வட்டிக்குப் பணம் வாங்கிய பெண்களை மிரட்டி உல்லாசமாக இருந்த பைனான்சியர் சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தர்மபுரி: தர்மபுரியில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்களை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும் 67 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய பைனான்சியர் சிவராஜூக்கு தர்மபுரி மகிளா நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ஒரு பைனான்சியர். இந்த நிதி நிறுவன அதிபர் பல பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். வட்டியை குறைக்க கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது காம வலையில் வீழ்த்தினார்.

தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கிய பெண்களை பாலக்கோடு அருகே குப்பன் கொட்டாயில் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டுக்கு வரவழைத்து தனது காம இச்சையை தீர்த்துக் கொண்டதோடு பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ காட்சிகளாகவும் எடுத்து இருக்கிறார்.
இந்த ஆபாச வீடியோ காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்தார். இப்படி 27 பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சியை அவர் பதிவு செய்து வைத்து அந்த காட்சிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போட்டு பார்த்து கொண்டார்.
இதனிடையே ஹேங்க் ஆன போது அதை செல்போன் கடைக்காரர் ஒருவரிடம் கொடுத்தார். அவர் அந்த செல்போனை ரிப்பேர் செய்த போது அதில் இருந்த ஆபாச காட்சிகளை தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து அதை மற்றவர்களுக்கு காப்பி எடுத்து கொடுத்து உள்ளார். மேலும் நிதி நிறுவன அதிபரிடம் செல்போனில் பதிவான காட்சி குறித்து பேரம் பேசி உள்ளார். ரூபாய் 15 லட்சம் கொடுத்தால் தகவலை வெளியே சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார். அவரை பண்ணை வீட்டுக்கு சிவராஜ் வரவழைத்து தர்ம அடி கொடுத்து இருக்கிறார்.
உயிர் பிழைத்தால் போதும் என்று பண்ணை வீட்டில் இருந்து ஓடி வந்த அவர் இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கூறிவிட்டார். விசாரித்து தகவலை உண்மை என்று தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அதிகாரி இது குறித்து பாலக்கோடு போலீசில் புகார் செய்ய போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சேர்ந்த 68 பெண்களை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தர்மபுரி மகிளா நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில், சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications