தருமபுரி தொகுதி: திமுக- அதிமுக வாக்கு பலத்துடன் கடுமையாக மோதும் பாமக சவுமியா அன்புமணி!
தருமபுரி: லோக்சபா தேர்தலில் திடீரென நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியானது தருமபுரி. பாமக தமது வேட்பாளரை மாற்றி அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணியை வேட்பாளராக அறிவித்ததால் அனைவரது கவனமும் தருமபுரி பக்கமும் திரும்பியுள்ளது.
தருமபுரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர். 2021 சட்டசபை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் 3-ல் அதிமுக; 2-ல் பாம்க வென்றது. தருமபுரி லோக்சபா தொகுதி எம்பியாக இருந்தவர்களில் 5 எம்பிக்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதியில் பாமக 4 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை, அதிமுக, காங்கிரஸ் 2 முறை வென்றுள்ள்ன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் ஒரு முறை இத்தொகுதியில் வென்றிருக்கிறது.

தருமபுரி தொகுதியில் வன்னியர்கள் 35%; தலித்துகள் 25% ; கொங்கு கவுண்டர்கள் 15%; இதர சமூகத்தினர் 25% உள்ளனர். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர்.
2004 லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஆர். செந்தில் (பாமக) - 3,97,540.
பு. தா. இளங்கோவன் (பாஜக) - 1,81,450.
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள்
தாமரைச்செல்வன்(திமுக) 3,65,812
ஆர். செந்தில் (பாமக) 2,29,870
இளங்கோவன்(தேமுதிக) 1,03,494
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள்
அன்புமணி ராமதாஸ்(பாமக) 4,68,194
மோகன்(அதிமுக) 3,91,048
தாமரைச்செல்வன்(திமுக) 1,80,297
வாழப்பாடி ராம சுகந்தன்(காங்கிரஸ்) 15,455
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்
செந்தில்குமார்(திமுக) 5,74,988
அன்புமணி ராமதாஸ்(பாமக ) 5,04,235
பழனியப்பன் (அமமுக) 53,655
2024 லோக்சபா தேர்தல் வேட்பாளர்கள்
ஆ.மணி (திமுக)
சவுமியா அன்புமணி (பாமக)
டாக்டர் அசோகன் (அதிமுக)
அபிநயா பொன்னிவளவன் (நாம் தமிழர்)
தருமபுரி தொகுதியை பற்றி: மானாவரி சாகுபடிதான் பிரதானம். வேலைவாய்ப்புக்காக வெளியூர்களுக்கு படையெடுக்கும் இளைஞர்கள்தான் அதிகம். உள்ளூரிலேயே தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய சிப்காட் தொடக்க நிலையில்தான் உள்ளது. 40% வனப்பகுதியாக இருக்கும் தருமபுரியி வனத்துறை சார் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இன்னமும் பின் தங்கிய மாவட்டமாக இருக்கும் தருமபுரி லோக்சபா தொகுதியில் அடிப்படை வசதிகள் முதன்மை பிரச்சனை.
தருமபுரியில் வெல்லப் போவது யார்?: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியும் தொடக்கத்தில் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்தது. திமுக- அதிமுகதான் இங்கு மோதும் நிலைமை இருந்தது. பாமகவும் அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. ஆனால் திடீரென பாமக தலைமை அக்கட்சித் தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணியை வேட்பாளராக அறிவிக்க தமிழ்நாட்டின் நட்சத்திர தொகுதியாகிப் போனது தருமபுரி. சவுமியாவின் மகள்கள் இருவரும் களமிறங்கி பிரசாரம் செய்ய கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகிறது தருமபுரி. பாமகவைப் பொறுத்தவரை கவுரவப் பிரச்சனையாக கருதுகிறது. கடந்த தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தோற்றார்; இத்தேர்தலில் அவரது மனைவி வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாமகவினர் முழு வீச்சில் களத்தில் பம்பரமாக சுழலுகின்றனர். திமுகவும் அதிமுகவும் தங்களுக்கான பலமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தொகுதி தருமபுரி. ஆகையால் மாம்பழம் வெற்றிக் கனியாகுமா? என்பதை அறிய ஜூன் 4 வரை காத்திருப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications