பாலியல் புகாரில் சிக்கிய தருமபுரி ஆசிரியர்கள் - அதிரடி இடமாற்றம்
தருமபுரி: தருமபுரியில் பாலியல் புகாரில் சிக்கி விசாரணைக்கு உள்ளான இரண்டு ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியர்களான சசிகுமார் மற்றும் திருலோகசந்தர் ஆகிய இருவரும் ஆபாச படங்களை மொபைல் போனில் போட்டுக்காட்டி பாலியல் தொந்தரவு அளிப்பதாக வந்த புகார் வந்தது.

இதுகுறித்து, சைல்டு ஹெல்ப் லைன் மற்று கவித்துறை அதிகாரிகள் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் சசிகுமாரை பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், திருலோகசந்தரை காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications