தயாநிதி மாறன் முன் ஜாமீன் ரத்தாகுமா? சி.பி.ஐ. மனு மீது ஆக.10-ல் ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட 6 வாரகால இடைக்கால முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்தார் என்பது புகாராகும். இது குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இந்த வழக்கில் தயாநிதி மாறனின் உதவியாளர் மற்றும் சன் டிவி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தமக்கு முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் தயாநிதி மாறன். இதையடுத்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 6 வார காலம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதன் பின்னர் கடந்த மாதம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராகி விசாரணையை தயாநிதி எதிர்கொண்டார். ஆனால் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்காதததால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.
இவ்வழக்கு மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன் திங்கள்கிழமையன்று தீர்ப்பளிக்கப்படும் என்று கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications