சென்னை சிட்டியில் சிம்பிளிசிட்டி காட்டிய டோணி.. தெறிக்கவிடும் நெட்டிசன்கள்
சென்னை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் டோணி தரையில் ஹாயாக படுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை : சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு கொல்கத்தா செல்லும் முன் விமான நிலையத்தில் கோலி, பாண்டியா, ராகுல் தரையில் அமர்ந்திருக்க, முன்னாள் கேப்டன் டோணி ஹாயாக படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி தடையால் டோணி விளையாட்டை மிஸ் செய்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டி விருந்தாக அமைந்தது. டோணி கேலரியில் இருந்து கிரவுண்டுக்கு செல்லும் போதும் சரி, ஒவ்வொரு முறை பந்துகளை எதிர்கொள்ளும் போதும் சரி சென்னை ரசிகர்கள் அவருக்கு ஊக்கம் அளித்தனர்.
கேப்டன் பொறுப்பில் இல்லாத நிலையில், சாதாரண வீரராக களமிறங்கிய தோனி 88 பந்துகளில், 79 ரன்கள் குவித்து இந்திய அணியை கவுரவமான ஸ்கோர் எடுக்க உதவினார். மழை காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு ஓவர்கள் குறைக்கப்பட்ட போதும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இதனால் 1-0 என்ற எண்ணிக்கையில் தற்போது இந்தியா தொடரில் முன்னிலை வகிக்கிறது.

விமானத்திற்காக காத்திருப்பு
இந்நிலையில் சென்னையில் போட்டியை முடித்து விட்டு கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தா சென்றுள்ளனர். இன்று காலையில் கொல்கத்தா செல்வதற்காக அவர்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். அப்போது விமானத்திற்காக காத்திருந்த புகைப்படம் பிசிசிஐயின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

லைக்ஸ்கள் அள்ளுகிறது
கோலி, ஹர்திக் பாண்டியா, ராகுல் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்திருக்க தல டோணி மட்டும் தரையில் ஹாயாக படுத்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ஏழாயிரத்தை தாண்டி லைக்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இதே போன்று டோணியின் எளிமையைப் புகழ்த்து டுவிட்டரில் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
|
எளிமையின் அடையாளம்
தரையில் யார் படுத்துத் தூங்குகிறார் என்று தெரிகிறதா? எளிமையின் அடையாளம் என்னவென்று கேட்டால் அதற்கு டோணி, கோலி, ஹர்திக் பாண்ட்யா, ராகுல் என்று டுவீட்டியுள்ளர் ரசிகர் ஒருவர்.
|
வித்தியாசமானவர்
டோணி நிச்சயம் எல்லோரையும் விட எப்போதும் வித்யாசமானவர். அதைத் தான் இப்போதும் அவர் நிரூபித்துள்ளார் என்று டுவீட்டியுள்ளார் மற்றொரு ரசிகர்.
|
அமைதி
டோணி எப்போதுமே எளிமையின் அடையாளம். அந்த அடையாளத்தைத் தான் இப்போதும் அவர் வெளிக்காட்டியுள்ளார் என்று தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் இவர்.
|
அரசியலுக்கு வர வேண்டும்
டோணி மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தினர் நெட்டிசன்கள், இவர்களுக்கு ஒரு படி மேலே போய்விட்டார் இவர். டோணி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications