நீரிழிவு நோயாளிகள் அரசுப் பணிக்கு தகுதியானவர்களே.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சென்னை : நீரிழிவு நோயாளிகள் அரசுப் பணிக்குத் தகுதியானவர்கள் தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
2007ஆம் ஆண்டு தென்னக ரயில்வேயின் 3,698 குரூப் டி பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர் புஷ்பம் என்பவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அவர் உட்பட 58 பேர் அரசுப் பணிக்கு தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் புஷ்பம் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவருக்கு அரசுப் பணி வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தென்னக ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்ரமணியன், மதிவாணன் ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரர் புஷ்பத்தை 8 வார காலத்துக்குள் அவரது தகுதிகுக்கு ஏற்ற பணியில் நியமிக்க தென்னக ரயில்வேக்கு உத்தரவிட்டது.
மேலும், நீரிழிவு நோயாளிகள், அரசுப் பணிக்கு தகுதியுடையவர்களே என்றும், அரசுப் பணிக்கு நீரிழிவு நோயாளிகள் தகுதியில்லாதவர்கள் என்பதை நிரூபிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உலகிலேயே நீரிழிவு நோயாளிகள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. உலக நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை விடுத்துள்ள ஆய்வறிக்கையில், 40.9 கோடி இந்தியர்கள் நீரிழிவு நோயாளிகள் என்று கூறுகிறது. அப்படியானால், அவ்வளவு பேரும் வேலை இல்லாமல் தான் இருக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications