ஊத்தங்கரை வாசலில் விழுந்த ரூ.100.. அட, கிருஷ்ணகிரி முழுக்க "அது" வேற வருதாமே.. கவனமா இருங்க மக்களே
கிருஷ்ணகிரி: சமீபகாலமாகவே, கள்ளநோட்டு புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவுக்கு தள்ளும் ஒரு வைரஸ்தான், இந்த கள்ள நோட்டுக்கள். தமிழகத்திலும் இந்த கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவது, வேதனையை கூட்டி வருகிறது.
பணமதிப்பிழப்புக்கு பிறகு நாட்டில் கள்ள நோட்டுகள், கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என்றார்கள்.. ஆனால் அதற்கு பிறகுதான், கள்ளநோட்டுகள் புழக்கம் நாட்டிலே அதிகரித்து விட்டதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு வருகின்றன.

கள்ள நோட்டுக்கள்: கடந்த 2021 ல் நாட்டிலேயே கள்ள புழக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 3வது இடத்தை பிடித்திருந்தது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்தது. தமிழகம் முழுவதும் இதை களைவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்..
கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி கிடைப்பதன் அடிப்படையிலும் வேட்டைகள் நடத்தப்பட்டு வருகின்றன.. கடலோர மாவட்டங்கள் உட்பட, கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மீன் மார்க்கெட், காய்கறி சந்தை, கடைத்தெரு பகுதி உள்ளிட்ட பணப்புழக்கம் அதிக உள்ள பகுதிகளிலும் கள்ள நோட்டு புழக்க சம்பவம் நடந்து வருவதாக சொல்வதால், அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊத்தங்கரை: நேற்றுகூட ஊத்தங்கரையில் ஒருவர் சிக்கி உள்ளார்.. அங்குள்ள டாஸ்மாக் ஒன்றில், 100 ரூபாய் நோட்டு நோட்டை தந்து சரக்கு கேட்டுள்ளார் செங்கல் சூளை தொழிலாளி ஒருவர்.. ஆனால் அது கள்ளநோட்டாக இருந்ததை கண்ட டாஸ்மாக் ஊழியர், உடனடியாக நோட்டின் மீது பேனாவில் கள்ளநோட்டு என எழுத்தால் எழுதி அவரிடமே ஒப்படைத்தார்.. அதை பார்த்ததுமே அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார்.
இப்போதுதான் கூலி வேலை முடித்துவிட்டு, பணம் வாங்கி வருகிறேன் என்று சொன்னார்.. ஆனாலும், நாளெல்லாம் செங்கல்சூளையில் உழைத்து கொண்டு வந்து தந்த பணம், கள்ள நோட்டு என்று சொன்னதால், மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி சென்றார்.
கோரிக்கை: இதுபோன்ற கள்ளநோட்டு புழக்கம், ஊத்தங்கரை பகுதியில், கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருவதாக சொல்கிறார்கள்.. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி கூலி தொழிலாளிகள்தான்.. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரமும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கள்ள நோட்டு சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியது.. ஒரு மர்மநபர், தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும், ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் சொல்லி, வாடகை காரை புக் செய்துள்ளார்.. டிரைவர் சுதிர் என்பவரும் வாடகை காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்திருக்கிறார்.. அங்கு தயாராக நின்றிருந்த அந்த மர்மநபர், காரில் ஏறியதுமே கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று தண்ணி அடித்துள்ளார்.
டிரைவர்: தன்னுடன் வந்த டிரைவர் சுதிருக்கு நிறைய அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார்.. கொஞ்ச நேரத்தில், தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசர தேவைக்காக உடனே "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்ப வேண்டும், ஏடிஎம்ல் பணம் எடுத்து தந்து விடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. உடனே டிரைவர் சுதிர், தன்னுடைய ஓனருக்கு போன் செய்து மர்மநபர் தந்த நம்பருக்கு "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்பினார்.

பிறகு, வெளியே சென்ற அந்த நபர் பணத்துடன் திரும்பி 500 ரூபாய் நோட்டுக்களாக ரூ.9 ஆயிரம் பணத்தை டிரைவர் சுதிரிடம் கொடுத்தார். பிறகு, பாரில் இருந்து அவர் நபர் நைசாக நழுவி சென்றுவிட்டார். பாரில் மதுகுடித்த பில் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் சொல்லவும், சுதிர் தன்னிடம் இருந்த ரூ.500 நோட்டுகளை தந்துள்ளார்.. அப்போதுதான் அவை எல்லாம் கள்ளநோட்டுகள் என்பதும், அந்த நபர் டாக்டரும் இல்லை என்பதும் தெரியவந்தது. இப்போது அந்த "டாக்டர்" ஜெயிலில் உள்ளார்..
தகவல்: ஆன்மீக சுற்றுலா என்று சொல்லி, டாஸ்மாக்குக்கு செல்லும்போதே சுதிர் சுதாரிக்காமல் விட்டுவிட்டார். சமீபகாலமாகவே, புதிய 500 நோட்டுகளில் கள்ள நோட்டு உலா வருவதாக சொல்லப்படுகிறது. எனவே, மக்கள் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்றும், சந்தேகத்திற்குரிய பணமாக இருந்தால், உடனடியாக போலீசுக்கு தகவல்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications