ஜெ. வீட்டுக்குள் நாங்கள் செல்லவில்லை... வருமான வரித் துறை அதிகாரிகள்
ஜெயலலிதாவின் அறைக்குள் நாங்கள் செல்லவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த அறைக்குள் நாங்கள் செல்லவில்லை என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 9-ஆம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித் துறையினர் ஐடி ரெய்டு நடத்தினர். இதையடுத்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும், நகைகள், ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சோதனை நடந்தவர்கள் ஒவ்வொருவரையும் சென்னை அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு போயஸ் கார்டனில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
சுமார் நள்ளிரவு 1.30 மணி வரை நடைபெற்ற இந்த சோதனை குறித்து வருமான வரித் துறையினர் கூறுகையில், ஜெயலலிதாவின் அறைக்கு நாங்கள் செல்லவில்லை. ஜெயலலிதாவின் செயலாளர் பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. முறையான அனுமதியைப் பெற்ற பிறகே சோதனை நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பூங்குன்றனின் அடையாறு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கு பின்னர் விவேக் ஜெயராமன் கூறுகையில், ஜெயலலிதா தங்கியிருந்த அறையை சோதனை நடத்த அதிகாரிகள் கேட்டனர் , ஆனால் நாங்கள் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடித பண்டல்களையும், பென் டிரைவ், லேட்டாப் ஆகியவற்றையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications