Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அசையுதா" அஸ்திவாரம்?.. தர்மசங்கடத்தில் திமுக?.. அதென்ன செந்தில் பாலாஜி மட்டும்? இதுல இவ்ளோ இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ரெயிடுகள் நடத்தப்பட்டு வரும்நிலையில், இந்த அளவுக்கு ரெய்டு முக்கியத்துவம் பெற வேண்டிய காரணங்கள் என்ன? தாக்கங்களும், அதிர்வுகளும் என்னென்ன?

தமிழ்நாடு மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, நெருங்கிய நண்பர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் அலுவலகம், வீடுகள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்..

இன்று விடிகாலையிலேயே இந்த சோதனை ஆரம்பமாகிவிட்டதால், தமிழகமெங்கும் பரபரப்பு அந்த நிமிடமே தொற்றிக் கொண்டுவிட்டது.

Did the tamil nadu CM MK Stalin took action against Senthil Balaji and What are BJP ADMK plans

வெட்டி வா, கட்டி வா:

அரசியல் கட்சி தலைவர்களிடம் ரெயிடுகள் நடத்தப்படுவது சகஜம்தான் என்றாலும், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் ரெயிடுக்கு பல்வேறு பின்னணி காரணங்கள் அரசியல் ரீதியாகவே சொல்லப்பட்டு வருகின்றன.. 10 வருடம் கழித்து ஆட்சிக்கு வந்துள்ள திமுக, தன்னுடைய அமைச்சரவை லிஸ்ட்டை அன்று வெளியிட்டபோது, அதில் கூடுதல் கவனம் பெற்றது மின்சார துறைக்கான அமைச்சர் யார் என்பதில்தான்..!!

சீனியர்கள்:

செந்தில் பாலாஜியின் பெயரை பார்த்துமே, திமுகவின் சில சீனியர்களே கடுப்பானதாக செய்திகள் கசிந்தன.. ஆனால், செந்தில் பாலாஜி மீது முழுமையான நம்பிக்கையை முதல்வர் ஸ்டாலின் வைத்தார்.. இந்த நம்பிக்கையை அடுத்த சில மாதங்களிலேயே செந்தில் பாலாஜியும் காப்பாற்றினார்.. வெட்டி வா என்றால், கட்டி வந்துவிடுகிறாரே செந்தில் பாலாஜி என்று வெளிப்படையாகவே முதல்வர் பாராட்டியும் இருந்தார்..

Did the tamil nadu CM MK Stalin took action against Senthil Balaji and What are BJP ADMK plans

இறுதியில், கொங்கு மண்டலத்தை திமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற மிகப்பெரிய அசைன்மென்ட்டை செந்தில் பாலாஜியிடம் முதல்வர் தரப்பு வழங்க, இதனையும் செந்தில் பாலாஜி திறன்பட செய்து வர, எதிர்க்கட்சிகளில் அனல் அடிக்க துவங்கியது.. இந்த அனலில் கொங்கு அதிமுக தடுமாற, கொங்கு பாஜகவோ கிலியில் நடுங்க தொடங்கியது.. இதையடுத்தே, அனைத்து அமைச்சர்களையும் தாண்டி, செந்தில் பாலாஜி மட்டுமே நேரடியாக குறி வைக்கப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

மாநில தலைமை:

இந்த விஷயத்தில் பாஜக மாநில தலைமை கூடுதல் கவனம் செலுத்தியவாறே வந்ததையும், சாராய அமைச்சர் என்று ஓபனாகவே பாஜக விமர்சித்ததையும், சுட்டிக்காட்டவும் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில் செந்தில் பாலாஜியிடம், ரெய்டு நடந்து வருகிறது.. இது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது? என்பதைதான் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

1. கடந்த 2 மாத காலமாகவே, சோஷியல் மீடியாவில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கசிந்தபடியே இருந்தன.. குறிப்பாக, "செந்தில் பாலாஜி வழக்கின் முடிச்சி இறுக்கப்படுகிறது.. எம்பி தேர்தல் நெருங்க நெருங்க துறை சார்ந்த அம்புகள் அவர் மீது வீசப்பட உள்ளது" என்றெல்லாம் தகவல்கள் பரபரத்தன. அதிமுக, பாஜக ஆளுநர் தரப்பில் புகாரை கொடுக்க, இவர்களுடன் புதிய தமிழகமும் இணைந்து செந்தில் பாலாஜி மீதான புகாரை வாசித்தது.. இதற்கு பிறகு, ஆளுநர் மாளிகையிலும், செந்தில் பாலாஜி மீதான துறை சார்ந்த விஷயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வந்ததாம். இப்படிப்பட்ட இந்த ரெய்டு கவனம் பெற்று வருகிறது.

Did the tamil nadu CM MK Stalin took action against Senthil Balaji and What are BJP ADMK plans

2. யார் மீது கை வைத்தால், திமுக சூடாகும் என்று தெரிந்துதான், செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி தரப்பட்டுள்ளதாம். அதுவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ள நேரமாக பார்த்து இந்த ரெயிடுகள் நடப்பதும், மிகந்த கவனம் பெற்று வருகிறது.

3. கடந்த கால ஆட்சியில் நடந்த ஊழல்களை அடிப்படையாக கொண்டே ரெய்டுகள் நடத்தப்படுவது வழக்கம்.. அப்படித்தான், தற்போதைய ஆளும் திமுக அரசும், மாஜிக்களிடம் ரெய்டை நடத்தியது.. ஆனால், ஆளும் கட்சியையே அசைத்து பார்க்கும் வகையில், அமைச்சர் தரப்பில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.. சுருக்கமாக சொன்னால், அதிமுகவுக்கு திமுக "செக்" வைத்தால், திமுகவுக்கு பாஜக "குறி" வைத்துள்ளதும் கவனத்தை பெற்று வருகிறது.

4. விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கு கட்சிகள் தயாராகி கொண்டிருக்கின்றன.. ஆனால், அதிமுகவின் கோட்டையான கொங்குவிலேயே, தற்போது வலுவிழந்து காணப்படுகிறது.. இது நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் எதிரொலிக்கவே செய்தது.. இதற்கு அடிப்படை காரணம் செந்தில் பாலாஜி மட்டுமே. ஆக, பாஜக + அதிமுக இரண்டு தரப்புக்குமே, முட்டுக்கட்டையாக இருப்பது செந்தில் பாலாஜியின் செல்வாக்கு என்பதால்தான், "பதவிப்பறிப்பு" என்ற விஷயத்தை வலியுறுத்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவங்கியதாகவும் சொல்கிறார்கள்.

என்ன காரணம்:

அதேசமயம், இந்த ரெய்டு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது? என்ற சந்தேகமும் கிளம்புகிறது.. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: "இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான்.. அதிமுகவின் மாஜிக்கள் மீது, தற்போதைய திமுக அரசில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.. எதற்காக இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டன என்று டெல்லி மேலிடத்துக்கு நன்றாகவே தெரியும்.. அப்படியிருந்தும்கூட, அனைவரையும் விட்டுவிட்டு, திமுக அமைச்சர் மீது வலையை வீசியுள்ளது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

Did the tamil nadu CM MK Stalin took action against Senthil Balaji and What are BJP ADMK plans

குழப்பங்கள்:

திமுக அரசு நடத்தி இதுவரை எத்தனையோ ரெய்டுகள் தமிழகத்தில் நடந்துள்ளன.. ஆனால், ரெய்டின் முடிவுகள்? என்ன என்பதுதான் இதுவரை விடைதெரியாத குழப்பமாக உள்ளது.

இன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பிடம் ரெயிடு நடத்துவதால், திமுகவுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்த பாஜக முனைவதாக தெரிகிறது.. திமுகவுக்கு இது அதிர்ச்சி என்றாலும்கூட, இதனால், திமுகவுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.. வெறும் ரெய்டுகளை நடத்துவதால் மட்டுமே, ஒருவரது இமேஜ் பாதிக்கப்பட போவதும் இல்லை.. அது கட்சியையும் எந்த விதத்திலும் தாக்க போவதில்லை.. சட்டப்படியான முடிவு என்ன எடுக்கப்படுகிறது? என்பதை மட்டுமே மக்கள் கவனிப்பார்கள்.

சீமான் பேட்டி:

இன்னொரு வகையில் பார்த்தால், இப்படி ஒரு ரெயிடு நடந்ததுகூட திமுகவின் நன்மைக்கு என்றே சொல்லலாம்.. காரணம், "பாஜக - திமுக மறைமுக டீலிங்கில் உள்ளது" என்று சிலர் கிளப்பிவிட்டு வருகிறார்கள்.. அவ்வளவு ஏன், அன்று பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஸ்டாலினிடமும், உதயநிதியிடமும் நெருங்கி பேசியதை வைத்து, பல்வேறு கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன. "திமுகவின் கள்ளக்காதலி பாஜகதான்" என்று சீமான் ஓபனாகவே சொன்னாரே? இப்போது, இந்த ரெயிடு மூலம் அதுபோன்ற வதந்திகள் எல்லாம் நொறுக்கப்பட்டுள்ளன" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+