"இப்போது வேண்டாம்!" சிதம்பரம் நடராஜர் கோவில் நகை ஆய்வு! அறநிலைய துறை கடிதத்திற்கு தீட்சிதர்கள் பதில்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு ஆய்விற்காக வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய கடிதத்திற்குத் தீட்சிதர்கள் பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக அறநிலையத் துறைக்குப் புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு சிறப்புக் குழு ஒன்றை அமைத்து இருந்தது.
கடந்த மாதம் தொடக்கத்தில் சிறப்புக் குழு ஆய்வு செய்ய நேரடியாகக் கோயிலுக்குச் சென்றது. இருப்பினும், அந்த குழுவை ஆய்வு செய்யச் சிதம்பரம் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

நகை ஆய்வு
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அதாவது ஜூலை 19ஆம் தேதி கடிதம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் தீட்சிதர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அதில் வரும் 25ஆம் தேதி அறநிலையத்துறை அதிகாரிகளால் நகை சரிபார்ப்பு ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

குறுகிய அவகாசம்
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய கடிதத்திற்குத் தீட்சிதர்கள் பதில் அளிக்கும் வகையில் மற்றொரு கடிதத்தை அனுப்பி உள்ளனர். ஏற்கனவே ஆய்வுக்காக தங்கள் தரப்பு அனுப்பிய ஆட்சேபனை பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நகைகள் ஆய்விற்காக வரும் 25.07.2022 அன்று வருவதாக எங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் குறிப்பிட்டுள்ளதாகவும் இதற்கு மிகக் குறுகிய கால அவகாசமே இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

ஒத்துழைப்பு தருகிறோம்
கடந்த இரண்டு மாதங்களாக நடராஜர் கோவில் சம்பந்தமாக தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கூர்ந்து நோக்கும் போது, முன்பே முடிவு செய்து ஆய்வுக்கு வர உள்ளதாகத் தகவல் அனுப்பி உள்ளீர்கள் என்று சந்தேகப்படுகிறோம் என்றும் அந்த கடிதத்தில் தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். 1956இல் இருந்து நகைகள் ஆய்வு மற்றும் சரி பார்ப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவதாலும் எங்களிடம் கோவில் நகைகள் பராமரிப்பில் நேர்மையும் நம்பகத்தன்மையும் உள்ளது என்பதை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையில் தங்களது நகைகள் ஆய்வுக்கு ஒத்துழைப்பு நல்க உள்ளோம்.

ஆகஸ்ட் மாதம்
மேலும், அந்தக் கடிதத்தில் "கோவில் நகைகள் உள்ள அறையின் சாவி 20 பேர் பொறுப்பில் உள்ளது. இதில் தீட்சிதர்கள் சிலர் வட இந்தியாவில் நடைபெறும் வேத பாராயண விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்று உள்ளதாலும் எங்களது கோவில் வழக்கறிஞர் மற்றும் தணிக்கையாளர் வெளியூர் சென்றுள்ளதாலும், தங்களது ஆய்வினை வரும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குப் பின் எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து ஆய்வு மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

கோரிக்கை கடிதம்
நகை சரிபார்ப்பின் பொழுது தீட்சிதர்கள் சார்பில் நகை மதிப்பீட்டாளர் பங்கு பெறுவார்கள் என்றும் நகை சரிபார்ப்பு வெளிப்படைத் தன்மையாகவும் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் காணொளி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறைக்குத் தீட்சிதர்கள் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அறநிலையத்துறையில் இருந்து விராவில் பதில் கடிதம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications