சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் ஜெ. பங்களாவை நினைவிடமாக்க முடியாது: வெற்றிவேல்
சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் ஜெயலலிதா பங்களாவை நினைவிடமாக்க முடியாது என அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவிடமாக்க முடியாது என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறியதாவது:

சசியின் முகவரி
ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு முன்பாக வாரிசுதாரர்களிடம் கருத்து கேட்க வேண்டும். நீதிமன்ற ஆவணங்களின்படி சசிகலாவுக்கும் இளவரசிக்கும் வேதா நிலையம்தான் முகவரி.

உடைமைகள்
அவர்களது உடைமைகள் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் இருக்கின்றன. தற்போது சசிகலாவும் இளவரசியும் சிறையில் உள்ளனர்.

அத்துமீறல்
சசிகலா, இளவரசியின் ஒப்புதல் இல்லாமல் வேதா நிலையத்த அரசு எடுக்க முடியாது. சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் அரசு அதிகாரிகள் அந்த வீட்டுக்குள் உள்ளே நுழைவது அத்துமீறலாகும்.

தடுத்து நிறுத்துவோம்
அப்படி யாரேனும் உள்ளே நுழைந்தால் அனைத்து வழிகளிலும் அதை தடுப்போம். போலீசில் புகார் செய்வோம். சட்டப்படி தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.












Click it and Unblock the Notifications