கருணாஸுக்கு ஒரு நீதி.. எச். ராஜாவுக்கு ஒரு நீதியா.. என்ன அரசாங்கம் இது.. தினகரன் பாய்ச்சல்
Recommended Video

திருப்பூர்: கருணாஸுக்கு ஒரு நீதி, எச். ராஜாவுக்கு ஒரு நீதியா. என்ன மாதிரியான அரசு இது என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கருணாஸ் கைது விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் பேசுகையில், எச். ராஜா ஒன்று பேசினார். அதை ஊரே பார்த்தது. அதேபோல கருணாஸ் ஒன்றைப் பேசினார். எச். ராஜா தான் பேசியதை மறுத்தார். அது தான் இல்லை, தனது குரலே இல்லை என்றார். ஆனால் கருணாஸ் தான் பேசியதுதான் என்பதை ஒப்புக் கொண்டார். அதற்காக வருத்தமும் தெரிவித்தார்.

ஆனால் இன்று கருணாஸ் மீது வழக்குகளைப் போட்டு கைது செய்துள்ளனர். அதேசமயம், எச். ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கருணாஸ்க்கு ஒரு நீதி, எச்.ராஜாவிற்கு ஒரு நீதி என்பது அரசின் இரட்டை நிலைப்பாட்டை நிரூபிக்கிறது.
எச்.ராஜா பேசியதில் காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்ற கருத்தில் நான் ஒத்துப் போகிறேன். கருனாஸ் பேசியது வருத்தமளிக்கிறது. சட்டசபையில் என்னை ஒருமையில் பேசியதற்கு கருனாஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று அதையெல்லாம் மனதில் வைத்து கருனாஸ் கைது செய்யபட்டிருக்கிறார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பசுந்தோல் போத்திய புலி என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது. அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது கோமாளித்தனமாக உள்ளது. ஜெயக்குமார் சொல்வது குறித்து பேசுவது நமது நேரத்தை வீணாக்கவேண்டாம்.
மாநில அரசு வரிகளை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும். தற்போதுள்ள துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவே ஆர்.கே நகரில் மக்கள் எனக்கு வாக்களித்தனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 37 இடம் வெற்றி பெறுவோம் என தான் கூறியது நடக்கும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை மீறி தேசியகட்சிகள் வெற்றி பெற முடியாது என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications