வெற்றிவேல் இப்படி செய்வார் என்று தினகரனுக்கும், சசிகலாவுக்கும் கூட தெரியாது: ஜெயானந்த் அதிரடி பேட்டி
Recommended Video

சென்னை: வெற்றிவேல் பேட்டியளித்தது தினகரனுக்கும், சசிகலாவுக்கும் தெரியாது என்று திவாகரன் மகன் ஜெயானந்த் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுகுறித்து கூறுகையில், சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அறிவிக்காமல், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டுவிட்டார்.
வெற்றிவேல் நோக்கம் நல்ல நோக்கம் என்பதால் அதை சசிகலா புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்.

வேறு வழியில்லை
ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டது. வெற்றிவேல் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால்தான் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை.

தினகரன் பேசுவார்
இதுகுறித்து தினகரன் இப்போது பேட்டியளித்தால் அதை காரணமாக வைத்தே தேர்தலை நிறுத்த திட்டமிடுவார்கள் என்பதால், வீடியோ பற்றி தினகரன் இப்போது கருத்து கூறவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தினகரன் கருத்து கூறுவார் என்றார்.

பலவீனமாக உள்ளதா
பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளருக்கு தெரியாமல் ஒருவர் வீடியோ வெளியிடுவது உங்கள் தரப்பில் மற்றொரு அதிகார மையம் உருவாகுவதை போலவும், உங்கள் தரப்பு பலவீனமாக இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்குகிறதே என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ஜெயானந்த், "இதுபோன்ற முக்கிய வீடியோவை ஒரே காப்பிதான் வைத்திருக்க வேண்டும் என்று இல்லை.

பல காப்பிங்க
பல காப்பி வைத்திருந்தால்தான் அது அழிந்து போகாமல் காப்பாற்ற முடியும் என வைத்திருப்பார்கள். அதில் தப்பில்லை. அதில் ஒரு காப்பியைதான் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். ஜெ, வீடியோ வெளியானதால் அதிமுக தொண்டர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இவ்வாறு ஜெயானந்த் தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications