ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார்: அமைச்சரின் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி!
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திண்டுக்கல்: ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடிவிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவ்வப்போது ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஜெயலிதா அப்பல்லோவில் இட்லியும் சாப்பிடவில்லை, நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறி பகீரங்க மன்னிப்பு கேட்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. அதோடு நிற்கவில்லை அமைச்சரின் சர்ச்சை பேச்சு. இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது அதிமுகவினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.

ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்
அப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்.

மனம் நொந்துபோய்தான்
இவ்வாறு பேசிய அமைச்சர் பின்னர் சுதாரித்துகொண்டார்.
கொள்ளையடித்த உங்களின் கும்பலால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். மனம் நொந்துபோய்தான் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

ஜெ.ஆன்மா தண்டிக்கிறது
உங்களுக்கு தினம் தினம் சோதனை வருகிறது என்று சொன்னால் ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை தண்டித்துக்கொண்டிருக்கிறது. தினகரன் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

துரோகியின் பின்னால்
ஜெயலலிதாவால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டவர் தினகரன். உங்களை உறுப்பினராக கூட சேர்க்கவில்லை துரோகியின் பின்னால் 18 எம்எல்ஏக்கள் சென்றனர். இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

குண்டு போட்ட திண்டுக்கல்
கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை கருத்துகளை கூறியுள்ளார். ஆனால் தற்போது ஜெயலலிதாவே கொள்ளையடித்தார் என்று கூறி அமைச்சர் குண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதிமுகவினர் கலக்கம்
ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்டவற்றால் அதிமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு அதிமுக மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications