For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அனல் பறக்குது... புதுச்சேரியில் ஆட்டம் போடும் தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் - வீடியோ

புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாலிபால், ஜாகிங், வாகிங் என சந்தோஷமாக பொழுதைக் கழித்துக்கொண்டு உள்ளார்கள்.

By Suganthi
Google Oneindia Tamil News

Recommended Video

    தனியார் விடுதியில் எம் எல் ஏக்கள் சொகுசு வாழ்கை-வீடியோ

    புதுச்சேரி: தமிழகத்தில் அரசியல் களம் ஆடிப்போயிருக்கும் சூழலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சொகுசு விடுதியில் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடிதம் கொடுத்துவிட்டு, இரண்டுநாள் ஓய்வெடுக்க புதுச்சேரி விண்ட் பிளவர் சொகுசு ரிசார்ட்டுக்கு பயணம் ஆனார்கள்.

    Dinakaran support MAs in Puducherry wind flower resort enjoying their resort life

    அதன்பின்பு அங்கிருந்து சன்வே என்ற சொகுசு விடுதிக்குச் சென்றார்கள். மீண்டும் விண்ட் பிளவர் சொகுசு விடுதிக்கே திரும்பிவிட்டனர். இரண்டு நாள் ஓய்வு என்று சொல்லிச் சென்றவர்கள் பத்து நாட்களாகியும் சொகுசு ரிசார்ட்டில் இருந்து வெளியேறவில்லை.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தஙகதமிழ் செல்வன் மட்டும் அவ்வப்போது ஊடகங்களிடம் கருத்துக் கூறுவார். மீதி நேரங்களில் கடற்கரையில் வாக்கிங், ஜாகிங் செல்வது என தன் சக எம்.எல்.ஏக்களுடன் பொழுதைக் கழித்து வருகிறார்.

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குழந்தைகள் போல் 'சீசா' விளையாடினார்கள். தற்போது வாலிபால் விளையாடி பொழுதை உற்சாகமாகக் கழித்து வருகிறார்கள்.

    புதுச்சேரியில் அவர்கள் விளையாடிக்கொண்டிருக்க, சென்னையில் ஆளுநரோ அவர்களும் அதிமுகதான்; உள்கட்சி விவகாரத்தில் நான் சட்டப்படி தலையிட முடியாது என கூறிவிட்டார். இதன்பிறகும் அவர்கள் ரிசார்ட்டிலேயே இருப்பார்களா? சென்னைக்குத் திரும்புவார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English summary
    Dinakaran support MLAs in Puducherry wind flower resort enjoying their resort life in odd situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X