நெட்டிசன் கொடுத்த கமெண்டுக்கு நடிகை சுனைனா மறக்க முடியாத பதிலடி.. இந்த ரிப்ளே எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளங்களில் நடிகைகள் பகிரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் விதவிதமான கமெண்ட் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். சில நேரங்களில் அந்த கமெண்டுகளுக்கு நடிகைகள் கொடுக்கும் பதில்களும் பெரிய அளவில் கவனம் பெரும். அப்படித்தான் இப்போது நடிகை சுனைனாவின் இன்ஸ்ட்டா பதிவு ஒன்றில் வந்த கமேண்ட்டும், அதற்கு அவர் கொடுத்த பதிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசனின் கமெண்ட்

சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை பகிர்ந்து இருக்கிறார். தீபாவளி அதுவுமாக அவர் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்ததும் அந்த பதிவின் கீழ் முதல் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், "நீங்க பார்க்க என்னுடைய எக்ஸ் மாதிரியே இருக்கீங்க.. ரியலி மிஸ்" என்று சொல்லி இருக்கிறார். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை பார்த்தால் பலரும் பெரிதாக பதில் கொடுக்காமல் கடந்து போவார்கள். ஆனால் சுனைனா அதற்கு கொடுத்த பதில் தான் இப்போது பேசு பொருளாக இருக்கிறது.

Sunaina

நடிகை சுனைனா பதிலடி

அந்த நெட்டிசனின் கமெண்டுக்கு சரி டா இப்போ என்ன ?என்ற பாணியில் கருணாஸ்
ரியாக்ஷனை மீம்ஸ் ஆக கொடுத்து இருக்கிறார். அதோடு I'm so sorry, I just had the itch to post this 🤣🙏🏽 என்றும் மற்றொரு கமெண்ட்டில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது இது போன்ற கமெண்டை பார்த்ததும் எனக்கு இப்படி ஒரு பதிவை போட வேண்டும் என்று தோன்றி விட்டது, அதனால் பகிர்ந்து விட்டேன் என்று காமெடியாக சொல்லி இருக்கிறார். இந்த கமெண்டை பார்த்ததும் நெட்டிசன்கள் சுனைனாவின் பதிலடி பாத்தீங்களா? நீங்க என்ன மொத ராத்திரி இயக்குனர் ராஜா கருப்பசாமி மாதிரி மீம்ஸ் போட்டு கலாய்க்கிறீங்க என்று கமெண்ட் கொடுக்கின்றனர்.

எங்கேஜ்மென்ட் போட்டோஸ்

சுனைனாவின் தனிப்பட்ட வாழ்க்கை பொருத்தவரை கடந்த சில வருஷங்களாக அவருடைய காதல் பற்றிய செய்திகள் பேசப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டு கைகளில் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை போஸ்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்ததும் அவருக்கு நிச்சயமாகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது சுனைனாவே அந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நான் மிக மகிழ்ச்சியாக நிச்சயதார்த்தம் செய்து இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் அப்போது அவருடைய வருங்கால கணவர் யார் என்பதை பற்றி அவர் சொல்லவில்லை.

Sunaina

பின்னர் துபாயை சேர்ந்த பிரபல சமூக வலைதள பிரபலமான காலித் அல் அமெரியுடன் சுனைனா காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது. காலித் பிறந்தநாள் போட்டோவில் கூட சுனைனா இருப்பதும் அதிகமாக பேசப்பட்டது. ஆனால் இவர்களுடைய திருமணம் எப்போது? அல்லது பரவி வரும் செய்தி வதந்தியா? என்று எந்த விளக்கத்தையும் சுனைனா இதுவரைக்கும் கொடுக்கவில்லை. இவரை பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் அறிமுகமானது காதலின் விழுந்தேன் படத்தின் மூலமாகத்தான்.

சுனைனாவின் படங்கள்

நடிகர் நகுலுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார். முதல் படமே அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதற்கு முன்பே தெலுங்கில் குமார் வெர்சஸ் குமாரி என்ற படத்தில் நடித்திருந்தார். முதல் படம் தமிழில் கொடுத்த வெற்றியை தொடர்பு நகுலுடன் மாசிலாமணி படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். பிறகு வம்சம், நீர்ப்பறவை, தொண்டன், சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா என தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அதிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை படத்தில் எஸ்தர் கேரக்டரில் நடித்ததற்கு அவருக்கு அதிக பாராட்டு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

சினிமாவில் மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட சுனைனாவின் போட்டோவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாசமான ஏஐ வீடியோ இணையத்தில் பரவியது. அதற்கு சுனைனா கோபமாக பேசிய வீடியோவும் வைரலானது. இந்த நிலையில் இப்போது தன்னுடைய தீபாவளி புகைப்படத்துக்கு நெட்டிசன் கொடுத்த கமெண்டுக்கு ஜாலியாக பதிலடி கொடுத்த நிலையத்தில் மீண்டும் இவரை பற்றி பேச வைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+