Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரவையில் இருந்து 4 பேரை தூக்க வேண்டும்... திகார் தினகரனின் ஆதரவாளர்கள் கூக்குரல்

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் ஜெயகுமார் உள்பட 4 பேரை தூக்க வேண்டும் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் ஜெயகுமார் உள்ளிட்ட 4 அமைச்சர்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். பின்னர் அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தனது அக்கா மகன் தினகரனை நியமித்து விட்டு சென்றார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு இடியாப்ப சிக்கல்களில் சிக்கினார் தினகரன்.

 திகார் சிறையில்...

திகார் சிறையில்...

இதனிடையே ,முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணிகளும் ஒன்று இணைவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியதாக டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 ஜெயகுமார் உள்ளிட்டோர் பேச்சு

ஜெயகுமார் உள்ளிட்டோர் பேச்சு

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும்போதே அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி, வீரமணி உள்ளிட்டோர் தினகரனையும், சசிகலாவையும் கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். மேலும் அதிமுக தலைமையகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களும் தூக்கி வீசப்பட்டன. இதனால் தினகரனும், அவரது ஆதரவாளர்களும் கொதித்தனர்.

 சிவி சண்முகம் பேச்சு

சிவி சண்முகம் பேச்சு

இதனிடையே தினகரன் கைது குறித்து அமைச்சர் சிவி சண்முகத்திடம் கேட்டபோது இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை. அவர் மீதான புகாரை அவரே சந்திப்பார் என்றார். இதுபோல் தினகரனுக்கு எதிராக பல்வேறு அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

 ஜாமீனில் வெளியே வந்த தினகரன்

ஜாமீனில் வெளியே வந்த தினகரன்

இந்நிலையில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், தான் தொடர்ந்து அதிமுகவில் பணியாற்றுவேன் என்றும் , தன்னை நீக்க அதிமுக பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் அதிமுகவில் தொடர்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முடிவு எடுப்பார் என்றார்.

 தினகரனுக்கு பயமா?

தினகரனுக்கு பயமா?

இத்தனை நாள்கள் தினகரன் மீது நெருப்பு போல் கக்கிய அமைச்சர்கள் தற்போது தினகரன் வெளியே வந்த நிலையில் பம்மி வருகின்றனர். அதிமுகவில் துணை பொதுச் செயலாளராக தொடர்வேன் என்று தினகரன் கூறியது குறித்து அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, அதுகுறித்து வழிகாட்டுதல் குழு முடிவு செய்யும் என்றார். இது தினகரனிடம் அமைச்சர்களுக்கு ஏற்பட்ட பயத்தையே காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

 தினகரனுடன் ஆலோசனை

தினகரனுடன் ஆலோசனை

சென்னை வந்த டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் கட்சி தலைமைக்கு எதிராக பேசி வரும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கவும், கட்சியை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆலோசனையில் தினகரன் அணி ஆதரவு எம்எல்ஏக்களான செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன், தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 4 அமைச்சர்கள் மீது நடவடிக்கை

4 அமைச்சர்கள் மீது நடவடிக்கை

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஒரு சில அமைச்சர்கள் சசிகலா, தினகரனுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், கட்சியை தினகரன் கைப்பற்ற வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது என்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் அடுத்தகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+