டிடிவி தினகரனின் முதல்வர் கனவு... மகான்களின் ஜீவசமாதிகளில் தரிசனம்
கரூரை அடுத்துள்ள ஸ்ரீ சற்குரு சதாசிவப்ரஹ்மேந்திராள் கோயிலில் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (இன்று) சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு மேற்கொண்டார்.
Recommended Video

கரூர்: எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்துள்ள டிடிவி தினகரன், முதல்வர் கனவில் வலம் வருகிறார். இதற்காக கரூர் அடுத்துள்ள ஸ்ரீ சற்குரு சதாசிவப்ரஹ்மேந்திராள் கோவிலில் இன்று டிடிவி தினகரன் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு மேற்கொண்டார்.
அமாவாசை நாளில் பிரத்யங்கிரா தேவி யாகம் தொடங்கி தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் யாகம் வரை செய்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்.
தேர்தல் வெற்றிக்கு முன்பாக திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி வாங்க சென்றார் தினகரன். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏவான பின்னர் முதல் முறையாக கரூரில் உள்ள ஸ்ரீ சற்குரு சதாசிவப்ரஹ்மேந்திராள் கோவிலுக்கு இன்று டிடிவி தினகரன் சென்று வழிபட்டுள்ளார்.

டிடிவி தினகரன் எம்எல்ஏ
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன். ஆளுங்கட்சி, எதிர்கட்சியின் படைபலம், பணபலத்தை தாண்டி, டிடிவி தினகரனின் பணபலம் வென்றது.
சட்டசபைக்குள் எம்எல்ஏவாக அடியெடுத்து வைத்துள்ளார் தினகரன்.

கரூர் கோவிலில் தினகரன்
கரூர் சென்ற டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர் செந்தில்பாலாஜி இன்று பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கரூர் கோவிலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறியது. கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றார்.

தொண்டர்கள் எங்கள் பக்கம்
அதிமுக அம்மா அணி என்பது எங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம். இதற்காக நீதிமன்றத்தை நாட உள்ளோம். அம்மாவின் உண்மையான விசுவாசிகள் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர்.
அடுத்த கட்டமாக கட்சியை வழிநடத்த வேண்டி உள்ளது.

18 எம்எல்ஏக்கள்
அதிமுக கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்பதே எனது குறிக்கோளாகும். உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்க கட்சி, சின்னம் தேவைப்படுகிறது. அதிமுக அம்மா அணி என்பது எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். 18 எம்எல்ஏக்கள் அதிமுக அம்மா அணியில் சேர முடியாது. அவர்கள் பொதுச்செயலாளரின் தலைமையில் செயல்படுவார்கள் என்றார். ஜெயலலிதா சிகிச்சை விடியோவை வெற்றிவேலிடம் நான் கொடுத்து வெளியிட சொன்னதாக கூறுவது தவறு

மகான்கள் சமாதி தரிசனம்
டிடிவி ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட போது திருவண்ணாமலையில் உள்ள மூக்குப் பொடி சித்தரிடம் தினகரன் ஆசி பெற்றார். இப்போது திடீரென கரூரில் சதாசிவப்ரஹ்மேந்திராள் ஆலயத்திற்கு வருகை தந்தார்.
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பிறகு தற்போது முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் மீண்டும் மகான்களின் ஜீவ சமாதி ஆலயத்தில் வழிபாடு செய்து வருவதாக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications