தேவர் சிலைக்கான ஜெ. தங்க கவசத்தை சசிகலா நியமித்த பொருளாளரிடம் ஒப்படைக்க கோரி தினகரன் கடிதம்
பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை சசிகலா நியமித்த பொருளாளர் ரெங்கசாமியிடம் ஒப்படைக்க கோரி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை; பசும்பொன் தேவர் சிலைக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் ரெங்கசாமியிடம் ஒப்படைக்கக் கோரி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இங்குள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 2014-ல் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.

இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் அக்கட்சி நிர்வாகிகளிடம் தர வங்கி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் மதுரை அண்ணா பேங்க் ஆப் இந்தியா மேலாளருக்கு டிடிவி தினகரன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளர். அதில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொருளாளர் ரெங்கசாமியிடம்தான் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும்.
அதேநேரத்தில் பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர்களிடம் தங்க கவசத்தை ஒப்படைக்க ஆட்சேபனை எதுவும் இல்லை. தங்களிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தால் ஜெயந்தி முடிந்த பின்னர் நவம்பர் 1-ந் தேதி முறைப்படி வங்கியில் ஒப்படைப்போம் என குறிப்பிட்டுள்ளார் தினகரன்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications