பெண்கள், கர்ப்பிணிகளை தாக்கியது ஏன்? போலீசாருக்கு இயக்குநர் அமீர் சரமாரி கேள்வி
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலிசார் தடியடி நடத்தியதற்கு இயக்குநர் அமீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராளிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதனா தமிழக காவல்துறையின் தடியடிக்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள், கர்ப்பிணகளை போலீசார் தாக்கியது ஏன் என்றும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தமிழகம் முழுவதும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது காவல்துறை நேற்று திடீர் தடியடி நடத்தியது. இதனால் பயந்து ஓடிய அவர்களை காவல்துறையினர் விரட்டி விரட்டி தாக்கினர்.
பெண்கள் முதியவர்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

இயல்பு நிலையை முடக்கிய காவல்துறை
காவல்துறையின் இந்த தாக்குதல் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சென்னை உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்து இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்
இந்நிலையில் இயக்குநர் அமீர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது "ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீதான தடியடி கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போராளிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்.

கர்ப்பிணிகளை தாக்கியது ஏன்?
போராட்டத்தில் தேச விரோத சக்திகள் இருந்திருந்தால் அவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாமே.எதற்கு தடியடி நடத்தினார்கள்?பெண்கள், கர்ப்பிணிகளை போலீசார் தாக்கியது ஏன்?

நேற்றுடன் முடிந்துவிட்டது
ஜல்லிக்கட்டு போராட்டம் நேற்று மாலையுடன் முடிந்து விட்டது. இதனை மாணவர்கள், இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்". இவ்வாறு இயக்குநர் அமீர பேசினார்.காவல்துறையின் தடியடி நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications