"சாமி"ங்கெல்லாம் அப்படி இப்படி இருக்காங்க.. மாட்டிக்காதீங்க.. பாக்யராஜ் அட்வைஸைக் கேளுங்க!
ஈரோடு: சாமி சாமி என்று சாமியார் காலில் விழுவோர் இன்றும் இருக்காங்க. குறிப்பாக பெண்கள். ஆனால் அவர்கள் காலில் விழுந்து விட்டு பின்னாடி அவர் அப்படி செஞ்சுட்டார், இப்படி செஞ்சுட்டார் என்று புலம்புறாங்க. தாய்மார்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கே பாக்யராஜ் பெண்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சாமியார்களம், அவர்களின் லீலைகளும் என்று ஆதி காலம் தொட்டு அடுத்து பத்து நூற்றாண்டுகள் வரைக்கும் கூட செய்திகள் போடலாம். அந்த அளவுக்கு சில சாமியார்களின் சில்மிஷங்கள் தொடர் கதையாகவே உள்ளன.
எத்தனை தவறுகள் நடந்தாலும் மக்கள் தொடர்ந்து சாமியார்களை நோக்கிப் போய்க் கொண்டுதான் உள்ளனர். கடவுள்களை கும்பிட்டது குறைந்து சாமியார்களை கடவுளாக நினைக்கும் அளவுக்கு மக்களில் பலர் நிலை குலைந்த நிலையில்தான் உள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் பாக்யராஜ் சாமியார்களிடம் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு கூட்டம்
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கலந்து கொண்டு பேசும்போது பாக்யராஜ் இவ்வாறு பேசினார். அப்போது சாமியார்கள் குறித்து அவர் பல கருத்துக்களையும் சொன்னார்.

புரிஞ்சுக்காம கால்ல விழறாங்களே
மக்களில் நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நம்ம ஜனங்க புரிஞ்சுக்காம கால்ல விழுந்துகிட்டே இருக்காங்க. மாட்டிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு இந்த சாமி அப்படி ஏமாத்தினார். அந்த சாமி இப்படி ஏமாத்தினார்ன்னு புலம்புறாங்க.

நல்ல சாமிங்களே கிடையாது
சாமியார்களின் காலம் நல்லவா இருக்கு? நமது தாய்மார்கள் இந்த சாமி விஷயத்துல மட்டும் இன்னும் ஏமாந்துக்கிட்டே இருக்காங்க. அது ஏன் என்றுதான் தெரியவில்லை.

விழிப்புடன் இருங்க
தயவு செய்து கடவுளின் பிரதிநிதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆசாமிகளிடம் பெண்கள் ஏமாந்து விடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார் பாக்யராஜ்.

சர்ச்சை சாமியார்கள்
சமீபகாலமாக ஏகப்பட்ட சாமியார்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நித்தியானந்தா மாட்டினார். இப்போது ஜக்கி வாசுதேவ் மீது பல பரபரப்புக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications