உபசரிப்பிற்கு நன்றி.. தமிழக முதல்வருக்கு லண்டன் புனித பீட்டர் தேவாலய இயக்குநர் கடிதம்
தமிழக முதல்வருக்கு லண்டன் புனித பீட்டர் தேவாலய இயக்குநர் ஸ்டூவர்ட் கடிதம் எழுதி இருக்கிறார்.
சென்னை: தமிழக முதல்வருக்கு லண்டன் புனித பீட்டர் தேவாலய இயக்குநர் ஸ்டூவர்ட் கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தமிழக மக்களின் செயல் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்னி குயிக் பிறந்தநாள் விழா தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக தேனியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவிற்கு லண்டன் புனித பீட்டர் தேவாலய குழுவினர் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இவர்களுக்கு தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதை அறிந்த புனித பீட்டர் தேவாலய இயக்குநர் ஸ்டூவர்ட் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மக்களுக்கு அதில அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில் ''தமிழக மக்களின் செயல் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் பண்பாடு வியப்பளிக்கிறது. எல்லா புகைப்படங்களையும் பார்த்தேன்'' என்றுள்ளார்.
மேலும் ''தமிழக மக்கள் அளித்த வரவேற்பும் உபசரிப்பும் மகிழ்ச்சி அளிக்கிறது. லண்டனில் உள்ள பென்னி குயிக் சிலை சீரமைக்கப்படும். இங்கும் பென்னி குயிக் பிறந்த நாள் கொண்டாடப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications