அப்பல்லோவில் மணிரத்தினம் அனுமதி.. வழக்கமான செக்கப் என தகவல்
இயக்குநர் மணிரத்னம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இயக்குநர் மணிரத்னம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட இயக்குனர் தமிழ், ஹிந்தி உட்பட மொழிகளில் நிறைய படங்களை இயக்கி இருக்கிறார். உலகம் முழுக்க இவரது படம் பிரபலம். தற்போது மிகப்பெரிய தயாரிப்பில் செக்க சிவந்த வானம் படத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் இன்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது, அவர் நலமாக இருக்கிறார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.












Click it and Unblock the Notifications