கோவை என்எஸ்எஸ் மாணவியை "கொன்ற" பேரிடர் பயிற்சியாளருக்கு நீதிமன்றக் காவல்
கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவியை பிடித்து தள்ளியதால் அவர் உயிரிழந்த வழக்கில் பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
Recommended Video

கோவை: கோவையில் என்எஸ்எஸ் பயிற்சியின்போது மாணவியை பிடித்து தள்ளியதால் அவர் உயிரிழந்த வழக்கில் பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகத்துக்கு வரும் 27-ஆம் தேதி நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் தீப்பிடிக்கும் போது தப்பிப்பது எப்படி என்பது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அப்போது 3-ஆவது மாடியிலிருந்து மாணவர்கள் குதித்தனர். அவர்களை கீழே வலை விரித்து கொண்டு தயாராக இருந்த மாணவர்கள் பிடித்து கொண்டனர்.
இந்நிலையில் மாணவி லோகேஸ்வரி குதிப்பதற்கு பயந்தார். அப்போது ஆறுமுகம் எவ்வளவு சொல்லியும் கேட்காததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஆறுமுகம், லோகேஷ்வரியை பிடித்து தள்ளிவிட்டார்.
இதில் கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆலாந்துறை போலீஸார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவில் (304) பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பிறகு ஆறுமுகத்தை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 ல் பொறுப்பு நீதிபதி ஞானசம்பந்தம் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 15 நாள் அதாவது 27 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக ஆறுமுகத்தை 7 நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை 16-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications