ஆர்.கே நகரில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு.. பரபரப்பு!
ஆர்.கே நகரில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஆர்.கே நகரில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 9வது சுற்று முடிவை அறிவிப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.
ஆர். கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 8 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

8 சுற்றுகள் முடிவில் தினகரன் முன்னிலை வகிக்கிறார். 9வது சுற்று முடிந்து முடிவுகள் அறிவிக்கும் முன்பு அங்கு 14வது மேஜையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது.
இதனால் அங்கு சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. பின் சில நிமிடத்தில் அதிகாரிகள் வேகமாக வாக்கு இயந்திரத்தை சோதனை செய்து சரி செய்தனர். இதனால் மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
கோளாறுக்கு பின் 9வது சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. 9வைத்து சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார். தற்போது 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications