18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு... நவ. 20-க்கு விசாரணை ஒத்திவைப்பு

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கு விசாரணையை வரும் 20-ந் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைத்துள்ளது.

முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Disqualification case: Hearing starts in Chennai HC

கடந்த செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில் 18 பேரின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு நீதிபதியிடம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்குகள் உள்ளிட்டவை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. பல்வேறு முறை இந்த வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுக்கு அண்மையில் மாற்றப்பட்டது.

அதன்படி இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தரப்பில் வைத்தியநாதனும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தகுதி நீக்க வழக்கை வரும் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+