ஆர்.கே. நகரில் முதன் முறையாக.. கள்ள ஓட்டுக்களை தடுக்க எவ்ளோ பெரிய பூத் சிலிப்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் புகைப்படம் தெளிவாகத் தெரியும் வகையில் பெரிய அளவிலான பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டுள்ளது. அவை வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நேற்று தொடங்
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் ஆர். கே. நகர் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் அச்சடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. கள்ள வாக்குகளை தடுக்கும் வகையில் வாக்காளர் புகைப்படம் தெளிவாக தெரியும் வகையில் பெரிய அளவில் இந்த பூத் சிலிப் அச்சடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில்தான் முதன்முறையாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்தார்.
தண்டையார்ப்பேட்டை திருவள்ளுவர் நகரில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பூத் சிலிப்பை கார்த்திகேயன் வழங்கினார். வரும் சனிக்கிழமைக்குள் பூத் சிலிப் வழங்கும் பணிகள் முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications