மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்திய வெளியகரம் அரசுப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு

திருவள்ளூர்: ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கதறி அழுத வெளியகரம் அரசுப்பள்ளியில் கல்வி அதிகாரி அருட்செல்வன் ஆய்வு நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை ஏற்க மறுத்த அப்பள்ளி மாணவர்கள் ஆசிரியரை போகவிடமாட்டோம் எனக்கூறி கட்டிப்பிடித்து அழுதனர்.

மாணவர்களின் அழுகையை பார்த்து ஆசிரியரும் கதறினார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இதனால் ஆசிரியருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டும் ஆதரவும் குவிந்தது.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் பகவானின் பணியிடமாற்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கண்ணீர் போராட்டம் நடத்திய அரசுப்பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி அருட்செல்வன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி அருட்செல்வன் விசாரணை நடத்தினார். ஆசிரியர் பகவானால் வெளியகரம் அரசுப்பள்ளி ஒரே நாளில் பெரும் பிரபலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!