முற்றும் குடும்பச்சண்டை... தினகரனுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என திவாகரன் அதிரடி!
டிடிவி. தினகரனுடன் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்படப்போவதில்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி : டிடிவி. தினகரனுடன் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்படப்போவதில்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். அம்மா அணி என்ற பெயரில் தனித்து செயல்படுவோம் தேவைப்பட்டால் தேர்தலை சந்திப்போம் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மூலம் திவாகரன், தினகரன் இடையே இருக்கும் பனிப்போர் வெளிவந்த நிலையில், வெற்றிவேலுக்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வெற்றிவேலும், ஜெயானந்தும் மாறி மாறி சசிகலாவின் தியாகத்திற்காகத் தான் அமைதியாக இருக்கிறோம் என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடி வந்தனர். தினகரன் திவாகரனிடையே நடந்த பங்காளிச்சண்டைக்கு திவாகரனே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாவது : இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படப்போவதில்லை. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காகவே கட்சியை தொடங்கியுள்ளார். அண்ணாவும் திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் எப்போதும் ஏற்கமாட்டோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்.
அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம், தேவைப்பட்டால் தேர்தலிலும் போட்டியிடுவோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை. வெற்றிவேலும், செந்தில்பாலாஜியும் அதிமுகவில் இடையில் வந்தவர்கள். அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என்று தினகரன் நினைக்கிறார். கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தன்னிச்சையாக தினகரன் கட்சி தொடங்கியுள்ளார். நானும் எனது மகனும் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பதாக அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் திவாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications