ரஜினியை சந்திக்கும் திவாகரன்?! - தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்
டெல்டா மாவட்டத்தில் உள்ள சில அமைச்சர்கள் திவாகரனிடம் நட்பு பாராட்டி வருகின்றனர். அவர்கள் மூலமாக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சில அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தரவும் முயற்சி செய்து வருகிறார் திவாகரன்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர் திவாகரன் தரப்பினர். ' இந்த சந்திப்பின் மூலம், தினகரனுக்கு செக் வைப்பதுதான் திவாகரனின் பிரதான நோக்கம்.
'டெல்டா மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை நிலைநிறுத்த ரஜினியுடனான சந்திப்பு அவசியம்' என நினைக்கிறார் திவாகரன்' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
டி.டி.வி. தினகரனுடனான மோதலுக்குப் பிறகு அம்மா அணியாகச் செயல்பட்டு வருகிறார் திவாகரன். தொண்டர்களை சந்திப்பது, கட்சியின் அடுத்தகட்ட இலக்கு என பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வருகிறார்.

இணக்கத்திற்கு விருப்பம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாகச் செல்ல விரும்பினாலும், ஆட்சி அதிகாரத்தில் இருந்து இதுவரையில் எந்த சிக்னலும் அவருக்கு வரவில்லை. " இதற்கு ஒரே காரணம், திவாகரனின் முயற்சிகளுக்கு செவிசாய்த்தால், 'எடப்பாடியை இயக்குவதே நான்தான்' எனப் பேசத் தொடங்கிவிடுவார் என்ற அச்சம்தான். இதை அங்குள்ளவர்களும் நம்புவார்கள். எனவேதான், அவர்களை நெருங்கவிடாமல் மௌனம் காக்கிறார் முதல்வர்.

அமைச்சர்களுடன் நெருக்கம்
'தினகரனுக்கு எதிராக சசிகலா அறிக்கை வெளியிடும்போது பார்த்துக் கொள்ளலாம்' எனவும் சில அமைச்சர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர். திவாகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தாலும் வம்பாகிவிடும் என்பதால்தான், 'தினகரன்-திவாகரன் அணிகள் காணாமல் போய்விடும்' என கோவையில் பேட்டி அளித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், டெல்டா மாவட்டத்தில் உள்ள சில அமைச்சர்கள் திவாகரனிடம் நட்பு பாராட்டி வருகின்றனர். அவர்கள் மூலமாக தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சில அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தரவும் முயற்சி செய்து வருகிறார் திவாகரன்" என விவரித்த டெல்டா மாவட்ட பிரமுகர் ஒருவர்,

தினகரன் வளர்ச்சி
" அரசியல்ரீதியாக பலமான அடித்தளத்தைப் போட வேண்டும் என நினைக்கிறார் திவாகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு அரசியல்ரீதியாக வளர்ந்துவிட்டார் தினகரன். அவரை அசைத்துப் பார்ப்பது அவ்வளவு எளிதானதல்ல. வரக் கூடிய தேர்தலில் பத்து சதவீதத்துக்கும்மேல் தினகரன் வாக்குகளைப் பெற்றுவிட்டால், அவரது அரசியல் பயணம் இன்னும் வேகமெடுத்துவிடும். எனவே, தினகரன் செய்யப் போகும் அரசியல் தவறுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் திவாகரன். லோக்சபா தேர்தலில் தி.மு.க அணியில் தினகரன் இணைந்துவிட்டால், ' அம்மா எதிர்த்த தி.மு.கவோடு கூட்டணி வைத்துவிட்டார்' என அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அமையும் என நினைக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தன்னுடைய அணிக்குச் செல்வாக்கைக் கூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

ரஜினியுடன் சந்திப்பு
அதன் ஒருபகுதியாக, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேச விரும்புகிறார். இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் கவனத்துக்கும் தகவல் கொண்டு சேர்த்துள்ளனர். ' தலைவரிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம்' என அங்கிருந்து பதில் வந்துள்ளது. இந்த சந்திப்பின்போது, டெல்டா மாவட்டங்களில் உள்ள தன்னுடைய செல்வாக்கை நேரடியாக விளக்கவும் தயாராக இருக்கிறார் திவாகரன்.

தினகரனை வீழ்த்த திட்டம்
அம்மா அணி தொடங்கும்போதே, 'இளைஞர்களையெல்லாம் ஒன்றிணைத்து, அறிவியல்பூர்வமாகச் செயல்படுவோம்' எனக் கூறியிருந்தார். டெல்டா பகுதியில் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் கைகோர்க்கும்போது தன்னுடைய செல்வாக்கின் பலம் கணிசமாக அதிகரிக்கும் என நினைக்கிறார். அரசியல்ரீதியாக தினகரனை வீழ்த்தவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ரஜினியுடனான சந்திப்புக்கு அனுமதி கிடைத்த பின்னரே, அடுத்தகட்ட முயற்சிகளை எடுக்க இருக்கிறார் திவாகரன்" என்றார் விரிவாக.
-
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications