அதிமுக ஆட்சியை மாங்கு மாங்கென்று பிரேமலதா புகழ என்ன காரணம் தெரியுமா.. பலே ஐடியா!
Recommended Video

சென்னை: ஐஸ் வைக்கிறது என்றால் என்ன என்று இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம் போல. மக்களிடம் கடுமையான அதிருப்திகளை அதிமுக அரசு சம்பாதித்து வைத்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பிரேமலதா விஜயகாந்த் போகும் இடமெல்லாம் அதிமுக ஆட்சியை வாய் வலிக்க வலிக்க புகழ்ந்து பேசி வருகிறார்.
பிரேமலதாவின் இந்த திடீர் புகழாரத்திற்கு சூப்பரான ஒரு பின்னணி உள்ளது என்கிறார்கள். அதாவது சட்டசபை இடைத் தேர்தலை மனதில் கொண்டுதான் பிரேமலதா இவ்வாறு பேசுவதாக சொல்கிறார்கள்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கனகராஜ் அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதனால் அந்தத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

குறி வைத்து பேச்சு
இந்நிலையில் அந்த தொகுதியை எப்படியாவது கேட்டு வாங்கி அங்கு போட்டியிட விரும்புகிறது தேமுதிக. ஏற்கனவே கடந்த 2011-2016 காலகட்டத்தில் சூலுர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தேமுதிகவை சேர்ந்த பனப்பட்டி தினகரன்.

வாய்ப்பிழந்த தேமுதிக
கடந்த முறை மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டதால் சூலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது தேமுதிக. இதனிடையே சூலூர் தொகுதியில் தேமுதிக போட்டியிட விரும்புவதன் பின்னணி குறித்து நாம் விசாரித்ததில், சூலூர் தொகுதியில் தேமுதிக எம்.எல்.ஏ.வாக இருந்த பனப்பட்டி தினகரனுக்கு கட்சியை தாண்டி ஏரியாவில் நல்ல செல்வாக்கு உள்ளதாம்.

தனிப்பட்ட செல்வாக்கு
கடந்தமுறை மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்டே கணிசமான வாக்குகளை அவர் பெற்றாராம். இதனால் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால் எளிதாக கரையேறி விடலாம் என நினைக்கிறாராம் "அண்ணியார்". இதற்காகத் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு படி மேலாகவே அதிமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாராம்.

கிடைக்குமா சீட்
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட தொகுதிகளுடன் சூலுருக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், அங்கு களமிறங்க தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன் ஆயத்தமாக உள்ளாராம். ஆனால் பாமக, பாஜக என யாருக்குமே இடைத் தேர்தலில் வாய்ப்பளிக்காத அதிமுக, தேமுதிகவுக்கு மட்டும் வாய்ப்பு தருமா என்ற கேள்வியும் எழுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications