மதுவிலக்கு பற்றி பேச தகுதியற்ற ஒரே தலைவர் கேப்டன்: விஜயகாந்த் உண்ணாவிரதத்தில் பகீர் 'பேச்சு'
சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பரபரப்புக்கும் பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இருக்காது என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அனைத்து கட்சிகளும் போராட்டங்களை கையிலெடுத்து வருகின்றன. இந்த வகையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குடும்பத்துடன் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வழக்கம் போல "கேப்டன் கருப்பு.. கண்ணில் தெரியுது நெருப்பு" என்ற அடுக்குமொழிகளுடன் புகழாரம் சூட்டப்பட்டன.
இதேபோல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்த ஒரு நிர்வாகி, "தமிழகத்திலேயே பூரண மதுவிலக்குப் பற்றி பேசுவதற்கு "தகுதியற்ற" ஒரே தலைவர் கேப்டன்தான்" என்று பேசிவிட பக்கென்று அதிர்ந்தது கூட்டம்..
உடனே அவர் சுதாரித்துக் கொண்டே தகுதியுள்ள ஒரே தலைவர் எங்கள் கேப்டன் கேப்டன்தான் என்று பதற்றத்தோடு முடித்தார்..
மேடைக்குப் பின்னால் என்ன நடந்துச்சோ?
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications