மாவட்டச் செயலாளருக்கு எதிராக விஜயகாந்த் விழாவில் தீக்குளித்த தேமுதிக தொண்டர் மரணம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தேமுதிக செயலாளர் ரவிக்குமாருக்கு எதிராக, கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் தீக்குளித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த தேமுதிக தொண்டர் கஜேந்திர பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேமுதிக சார்பில் கடந்த வாரம் பழனியில் கிழக்கு மேற்கு மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா நடைபெற்றக் கொண்டிருக்கும் போது திண்டுக்கல் 8வது வார்டு கிளைச் செயலாளர் கஜேந்திர பிரபு கூட்டத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

இதையடுத்து அவரை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் விஜயகாந்த் மதுரை விரைந்து வந்து கஜேந்திர பிரபுவைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது விஜயகாந்த்திடம், மாவட்டச் செயலாளர் ரவிக்குமார் குறித்து பல புகார்களை கஜேந்திர பிரபு அடுக்கியதாக கூறப்படுகிறது. தன்னிச்சையாக செயல்படுகிறார், தன்னைப் பதவியிலிருந்து நீக்கி விட்டார். அவர் இருந்தால் கட்சி உருப்படாது, அவரை மாற்ற வேண்டும். இதற்காகவே தான் தீக்குளித்ததாக கூறியிருந்தாராம் கஜேந்திர பிரபு.
இதையடுத்து கட்சியினருடன் ஆலோசனை செய்து வந்த விஜயகாந்த் நேற்று காலை ரவிக்குமாரை பதவியிலிருந்து நீக்கினார். இந்த நிலையில் நேற்று இரவு கஜேந்திர பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு மனைவியும், சிறு பையன்களான இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications