தேமுதிகவிலும் வேட்பாளர் மாற்றம் தொடங்கியது... காஞ்சியில் புதிய வேட்பாளராக ஏகாம்பரம் அறிவிப்பு
காஞ்சிபுரம் தேமுதிக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை மாற்றி விட்டு, அவருக்குப் பதில் புதிய வேட்பாளராக சி.ஏகாம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக போட்டியிடுகிறது. அக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இம்முறை மொத்தம் 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது.

இதில், 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். நேற்று முன்தினம் மீதமுள்ள 11 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக. அதில், விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் தேமுதிக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக இத்தொகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவரை மாற்றி விட்டு, அவருக்குப் பதில் காஞ்சிபுரம் வேட்பாளராக சி.ஏகாம்பரம் என்பவரை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications